ஊரடங்கு நீளுமா? மத்தி எஸ்கேப்; மண்ட காய்ச்சலில் மாநில அரசு!

சனி, 27 ஜூன் 2020 (08:29 IST)
மத்திய அரசு, மாநில அரசுக்கு ஊரடங்கு தொடர்பாக முடிவெடுத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளது. 

 
கடந்த மார்ச் மாதம் முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருந்து வகுகிறது. ஐந்தாம் கட்டமாக நீட்டிக்கப்பட்ட (ஜூன் மாதம்) ஊரடங்கின் போது பல தளர்வுகள் மத்திய அரசால் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ளது. 
 
எனவே, ஜூலை மாதம் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்வுகள் அதிகரிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து மத்திய அரசு தரப்பில் தெரிவிக்க்கப்பட்டுள்ளதாவது, மாநில அரசுக்கு ஊரடங்கு தொடர்பாக முடிவெடுத்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே சில மாநிலங்களில் ஊரடங்கு ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் பல கட்டங்களாக தொடர்ந்த ஊரடங்கின் ஐந்தாம் கட்டம் ஜூன் 30 வரை நடைமுறையில் உள்ளது.
 
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள முதல்வர் திங்கட்கிழமை அன்று மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அவர்களுடனான ஆலோசனைக்கு பிறகே ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்