உலகளவில் 99 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

சனி, 27 ஜூன் 2020 (07:58 IST)
தினமும் சராசரியாக சுமார் 2 லட்சம் பேர் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
 
உலகில் 98,98,220 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் உலக நாடுகள் பெரும் பரபரப்பு அடைந்துள்ளன. தினமும் சராசரியாக சுமார் 2 லட்சம் பேர் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
 
ஆம், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 98,98,220 ஆக உயர்வு, வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 53,52,383 ஆக உயர்வு, வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,96,077ஆக உயர்ந்துள்ளது. 
 
அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 25,52,956 ஆக உள்ளது. அதேபோல வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,27,640 ஆக உயர்ந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்