இந்திய அணியில் உள்ள ஷிகர் தவான் சாத்தான்குளம் சம்பவம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இன்று வணிகர்கள் சங்கம் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சாத்தான்குளம் தந்தை மகனின் மரணத்தில் நீதி வேண்டும் என்று திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.
இந்த சம்பவம் குறித்து திரைப்பிரபலங்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்து நீதி கேட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியில் உள்ள ஷிகர் தவான் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த விஷயம் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் தந்தை, மகன் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க குரல் எழுப்புங்கள்..! என பதிவிட்டுள்ளார்.
Horrified to hear about the brutality inflicted upon Jeyaraj & Fenix in Tamil Nadu. We must raise our voice and make sure justice is given to the family.