கே ராகுல் செய்த செயலால் அதிருப்தியடைந்த பிசிசிஐ… ஓ இதுதான் காரணமா?

vinoth
புதன், 14 பிப்ரவரி 2024 (11:29 IST)
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்துள்ள இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது. கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது டெஸ்ட்டில் காயம் காரணமாக விலகிய கே எல் ராகுல் மீண்டும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அணியில் இணைந்தார். ஆனால் இப்போது அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இளம் கிரிக்கெட் வீரரான தேவ்தத் படிக்கல் அணியில் இணைந்துள்ளார். மூன்றாவது போட்டிக்கு அவர் முழுமையான உடல் தகுதி பெறாததே இந்த விலகலுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தான் முழு உடல் தகுதி பெற்றது போல பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோவை தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ராகுல் பகிர்ந்திருந்தார். ஆனால் அவர் முழு உடல் தகுதியைப் பெற்றிருக்கவில்லை. இதனால் ரசிகர்களுக்கு தவறான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட கே எல் ராகுல் மேல் பிசிசிஐ அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்