வரட்டா மாமே.. டுர்ர்..! ஐபிஎல்லில் இருந்து விலகும் இங்கிலாந்து வீரர்கள்! – பேச்சுவார்த்தை நடத்தும் பிசிசிஐ!

Prasanth Karthick
திங்கள், 6 மே 2024 (15:17 IST)
ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த வீரர்கள் ஐபிஎல்லில் இருந்து விலகத் தொடங்கியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.



ஐபிஎல் போட்டியின் நடப்பு சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவை நெருங்கி வரும் நிலையில் ப்ளே ஆப் தகுதி பெற போகும் அணிகள் எவை என்பது குறித்த பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. இதற்கிடையே அணிகளில் ஆங்காங்கே சில வீரர்கள் காயத்தால் போட்டியிலிருந்து விலகுவதும் நடக்கிறது.

ஜூன் மாதம் தொடக்கமே உலக கோப்பை டி20 தொடங்க உள்ளதால் அனைத்து நாட்டு வீரர்களின் கவனமும் உலக கோப்பையை நோக்கி திரும்ப தொடங்கியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உலக கோப்பையில் விளையாட உள்ள வீரர்களை பயிற்சி மேற்கொள்ள வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் ஐபிஎல்லில் பல அணிகளிலும் விளையாடி வரும் இங்கிலாந்து வீரர்கள் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.

இது ஐபிஎல்லை நடத்தி வரும் பிசிசிஐயும், ஐபிஎல் அணிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் பிசிசிஐ நிர்வாகம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகு பயிற்சியை மேற்கொள்ளுமாறு பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. அதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஐபிஎல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்