ஆனால் பஞ்சாபுக்கு பதிலடியாக சிஎஸ்கே பவுலிங்கின் அதிரடி காட்டியது. பவர் ப்ளே முடிவதற்குள்ளேயே ஜானி பேர்ஸ்டோ, ரஸ்ஸோவை தூக்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் துஷார் தேஷ்பாண்டே. பின்னர் 7வது ஓவரில் இருந்து 10 வது ஓவருக்குள் வரிசையாக 3 விக்கெட்டுகள் விழுந்தன. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் பார்ட்னர்ஷிப்பும் செய்ய முடியாமல் தடுமாறத் தொடங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் மட்டுமே பெற்று 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸின் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும், இம்பேக்ட் ப்ளேயராக இறன்ஹ்கிய சிம்ரஜித் சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் சிஎஸ்கே புள்ளி வரிசையில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.