டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங்கை எடுக்க பேட்டிங்கில் இறங்கிய சிஎஸ்கேவில் ஆரம்பமே ரஹானே 9 ரன்களில் அவுட் ஆனார். ருதுராஜ் 32 ரன்களும், டேரில் மிட்செல் 30 ரன்களும் அடித்து ஒருவாறு ஆட்டத்தை கொண்டு போக முயன்றபோது கெயிக்வாட் விக்கெட் விழுந்தது. அடுத்து வந்த ஷிவம் துபே அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் டக் அவுட் ஆனார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே 167 மட்டுமே எடுத்துள்ளது. தற்போது சிஎஸ்கேவில் பதிரனா, முஸ்தபிசுரும் பந்துவீச்சில் இல்லாததால் பஞ்சாபின் ரன்களை எப்படி கட்டுப்படுத்தப்போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தாலே ஒழிய இன்று வெற்றிக்கான அதிர்ஷ்டம் பஞ்சாப் அணிக்கு அதிகமாகவே உள்ளது.