17 வது ஆசியக்கோப்பை (20 ஓவர்) போட்டிகள் செப்டம்பர் 9ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கும் இந்த போட்டிகளில் இந்தியா உட்பட 8 கிரிக்கெட் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14 ஆம் தேதி நடக்கவுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் உள்ளிட்டவர்களுக்கு இடமளிக்கப்படவில்லை. அதே நேரத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சர்வதேச டி 20 போட்டிகளில் விளையாடாத ஷுப்மன் கில் அணியில் இணைக்கப்பட்டு அவருக்கு துணைக் கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அணித் தேர்வு குறித்து பேசியுள்ள அஸ்வின் “ஷுப்மன் கில்லுக்காக நான் சந்தோஷப்படுகிறேன். அவர் மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளதால் அவரை அணியில் சேர்த்துள்ளதாக நினைக்கிறேன். ஆனால் அதே நேரம் ஸ்ரேயாஸ் ஐயரும் நல்ல ஃபார்மில்தான் இருக்கிறார். அவர் தேர்வு செய்யப்படாதது நியாயமில்லாதது என நினைக்கிறேன். ஷுப்மன் கில்லுக்காக சந்தோஷப்படுகிறேன். அதே நேரம் ஸ்ரேயாஸுக்காக வருத்தப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.