இந்த உயிரிழப்புகளால் ஆர் சி பி அணியும் கர்நாடக அரசும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டன. ஆர் சி பி அணி நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பெங்களூரு நகரத்தின் மையத்தில் இருக்கும் சின்னசாமி மைதானத்தில் இனிமேல் போட்டிகளே நடத்தக் கூடாது என்றும் புது மைதானத்தை உருவாக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் ஆர் சி பி அணி பற்றி முன்னாள் இந்திய வீரர் அம்பாத்தி ராயுடு கேலி செய்துள்ளது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில் “RCB அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல 18 ஆண்டுகள் ஆகியுள்ளது. அவர்கள் ஐந்து கோப்பை வெல்ல வேண்டுமென்றால் 72 ஆகும்” எனக் கூறியுள்ளார். ராயுடு தொடர்ச்சியாக ஆர் சி பி அணிக் குறித்து விமர்சித்து பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.