ஜம்மு காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக இந்தியா திரும்புகிறார் பிரதமர் மோடி..!

Siva

புதன், 23 ஏப்ரல் 2025 (07:44 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, சவுதி அரேபியா சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
 ஜம்மு காஷ்மீரில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் சிலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து ஆலோசனை செய்ய உடனடியாக சவுதி அரேபியா சுற்றுப்பயணத்தில் உள்ள பிரதமர் மோடி நாடு திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலின் படி, இன்று காலை பிரதமர் மோடி டெல்லி திரும்ப இருப்பதாகவும், டெல்லி வந்தவுடன் அவர் பயங்கரவாத தாக்குதல் குறித்து அவசர ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி சில வழிகாட்டுதலை கூறியுள்ளதாகவும், இதனை அடுத்து, அமித்ஷா தலைமையில் அவசர கூட்டம் கூடி, தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்