#WeWantRevenge.. காஷ்மீர் தாக்குதலுக்கு எதிராக பொங்கி எழும் நெட்டிசன்கள்..!

Siva

புதன், 23 ஏப்ரல் 2025 (08:47 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பல்ஹாம் என்ற பகுதியில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதல், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி பழிவாங்க வேண்டும் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பொங்கி எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று பல்ஹாமில் நடந்த தாக்குதலில் 25க்கும் மேற்பட்ட அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர் என்றும், இதனால் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் இந்துக்கள் மட்டுமே குறி வைத்து தாக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடி அவசரமாக சவுதி அரேபியா பயணத்தை முடித்துவிட்டு இந்தியாவுக்கு வந்து, கேபினட் அமைச்சர்களுடன் இந்த தாக்குதல் குறித்து ஆலோசனை செய்து வருகிறார். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு தான் காரணம் என்று கூறப்படும் நிலையில், தகுந்த நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பயங்கரவாத தாக்குதல் பற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வார்த்தைகளை வெளிக்கொணர முடியாத அளவுக்கு துக்கத்தில் இந்திய மக்கள் மூழ்கியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை பழிவாங்கியே தீர வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பொங்கி எழுந்து வருகின்றனர்.

இதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்