பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை இரண்டாவது ஓவரிலேயே அவுட் ஆக்கி சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்துள்ளார் அர்ஷ்தீப் சிங்.
சற்று முன்னர் தொடங்கிய இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா வென்றதை அடுத்து அவர் பந்து வீச முடிவு செய்தார். இதனை அடுத்து பாகிஸ்தான் அணி இன்னும் களமிறங்கிய விளையாடி வருகிறது.
முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் வீச அந்த ஓவரில் ஒர் ரன் மட்டும் எடுக்கப்பட்டது. அதன் பின்னர் இரண்டாவது ஓவரை வீச வந்த இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் எல்பிடபுள்யு முறையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை முதல் பந்திலேயே வெளியேற்றினார். இதன் மூலம் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்துள்ளார்.