இந்தியா-பாகிஸ்தான் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு!

ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (13:05 IST)
பெரும் எதிர்பார்ப்புக்குரிய இந்திய பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் சற்று முன் போடப்பட்ட டாஸில் இந்தியா வென்று உள்ளது. இதனை அடுத்து இந்தியா முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்டது.
 
இதில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா வென்றதை அடுத்து அவர் பந்து வீச முடிவு செய்தார். இதனை அடுத்து பாகிஸ்தான் அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பி பிரிவில் நடைபெறும் முதல் போட்டி என்பதாலும் இந்திய பாகிஸ்தான் போட்டி என்பதாலும் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்