இந்தியக் கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருகிறார். ஐபிஎல் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்ப விலையான 20 லட்சத்துக்கே ஏலம் எடுத்தது. ஆனால் இதுவரை எந்த சீசனிலும் அவருக்கு முழுமையாக விளையாட வாய்ப்பளிக்கப்படவில்லை. அதே போல விளையாடிய போட்டிகளிலும் கூட அவர் முழுமையாக 4 ஓவர்கள் பந்துவீசவே இல்லை.
மும்பையைச் சேர்ந்த விலங்குகள் உணவு சம்மந்தப்பட்ட நிறுவனம் ஒன்றில் இயக்குனராக இருக்கும் சானியா சந்தோக் என்பவரோடு சமீபத்தில் அர்ஜுனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. சானியா, மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான ரவி கையின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.