ஒரு நாள் போட்டிகளிலும் ஓய்வா?... ரோஹித் ஷர்மா அளித்த பதில்!

vinoth

வியாழன், 14 ஆகஸ்ட் 2025 (09:38 IST)
இந்திய அணியின் கேப்டன் (ஒருநாள் போட்டிகள்) ரோஹித் ஷர்மா டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது 38 வயதாகும் ரோஹித் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துகிறார். 2027 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதுதான் அவரின் தற்போதைய நோக்கமாக உள்ளது.

ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. ஏனென்றால் அப்போது அவருக்கு வயது நாற்பதாக இருக்கும். ரோஹித், கோலி போல உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் நபரும் அல்ல. இதனால் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் தொடரோடு அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இதுபற்றி பேசியுள்ள ரோஹித் ஷர்மா தான் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்று கூறியுள்ளார். அதனால் அவர் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்வரை விளையாட விருப்பம் கொண்டுள்ளார் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்