ஆஸ்திரேலியா - இந்தியா டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் ஜாஸ்பிரித் பும்ரா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதை தொடர்ந்து பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகளை மளமளவென சரித்த இந்திய அணி 181 ரன்களில் ஆஸ்திரேலியாவை ஆல் அவுட் ஆக்கியது.
இந்த டெஸ்ட்டின் இன்றைய இரண்டாம் நாள் போட்டியின் உணவு இடைவேளை நேரத்தில் திடீரென மைதானத்தை விட்டு இந்திய அணியின் கேப்டன் பும்ரா வெளியேறியுள்ளார். சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், முதல் டெஸ்ட்டை கேப்டனாக இருந்து வென்று கொடுத்த பும்ரா இந்த டெஸ்ட்டிற்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ரோகித் சர்மா தானாக முன்வந்து இந்த டெஸ்ட்டிலிருந்து விலகியுள்ளார். இந்த நிலையில் பும்ராவின் இந்த நிலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K