ஆசியக் கோப்பைக்குத் தயார் நிலையில் பும்ரா?

புதன், 13 ஆகஸ்ட் 2025 (14:59 IST)
ஆசியக் கண்டத்தில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளைக் கொண்டு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஆசியக் கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடுத்த சீசன் வரும் செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி தொடங்கி பத்தொன்பதாம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்காக அணிகள் தயாராகி வருகின்றன.

இந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் டி 20 வடிவில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அடுத்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடர் வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14 ஆம் தேதி நடக்கவுள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான அணியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இருப்பாரா அல்லது அவருக்கு ஓய்வளிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் இப்போது ஆசியக் கோப்பைத் தொடரில் விளையாட தான் தயாராக இருப்பதாக பும்ரா தரப்பில் இருந்து தேர்வுக்குழுவிற்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்