ஆசிய கோப்பை ; ஹாங்காங்கை வீழ்த்தி பாகிஸ்தான் அணி!

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (22:32 IST)
ஆசிய கோப்பை  நடந்து வரும்  நிலையில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் பாகிஸ்தான் ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுமா என்பது இன்றைய போட்டியில் தெரியும். தற்போது, டாஸ் வென்ற ஹாங்காங் கேப்டன் நிஜாகத் பந்து வீச்சுத் தேர்வு செய்தனர்.

முதலில் பேட்டிங் செய்த  பாகிஸ்தான் அணியில் ரிஷான் 78 ரன்களும், சாமன் 53 ரன்களும், ஷா 35 ரன்களும் எடுத்தனர். எனவே 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தன் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்து, ஹாங்காங்கிற்கு 194 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்து வரும் பாகிஸ்தான் அணியில்,  நிஷாகட் 8 ரன்களுடனும், முர்டசா 2 ரன்களுடன் அவுட்டாகினர்.

அதன்பின்னர்,  ஹாங்காங் அணியில் அடுத்து வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான  நிலையில் 10.4  ஓவர்களில் 38 ரன்கள் மட்டும் எடுத்து  அனைத்து  விக்கெட்டுகளும்  இழந்து படு தோல்வி அடைந்தனர். பாகிஸ்தான் அணி 155 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்