ஆசிய கோப்பை: இலங்கை வெற்றி பெறுமா? பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டம்!

வியாழன், 1 செப்டம்பர் 2022 (22:30 IST)
ஆசிய கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய கோப்பைதொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றைய போட்டியில், முதலில்   பேட்டிங் செய்த பங்களதேஷ் அணியில், ஹசன் 38 ரன் களும், அல் ஹசன் 24 ரன்களும், ஹூசைன் 39 ரன் களும் எடுத்தனர்.எனவே 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன் கள் எடுத்து இலங்கைக்கு 184 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இதையடுத்து தற்போது இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது. அதில்,  மெண்டிஸ் 44 ரன் களுடனும், குணத்திலகா 11 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.  10.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி மொத்தம் 86 ரன்களுடன் விளையாடி வ்ருகிறாது.ஆதாவது 55 பந்துகளுக்கு 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்பதால் நிதானமாக விளையாடி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்