இங்கிலாந்தின் அந்த அனுகுமுறைதான் நாதன் லயனை ஹீரோவாக்கியது- அஸ்வின் கருத்து!

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2023 (08:30 IST)
சமீபகாலமாக டெஸ்ட் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது இங்கிலாந்து அணி. அதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது அந்த அணிக்கு கேப்டனாகவும் , பயிற்சியாளராகவும் பென் ஸ்டோக்ஸும் மெக்கல்லமும் பதவியேற்ற பின்னர்தான். டெஸ்ட் போட்டிகளில் ஆக்ரோஷமாக விளையாடிய மெக்கல்லம், இப்போது தன்னுடைய பாணியை ஒட்டுமொத்த இங்கிலாந்து அணிக்கும் செயல்படுத்தியுள்ளார். இதை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பாஸ்பால் கிரிக்கெட் என அழைக்கின்றனர்.

இங்கிலாந்து அணியின் இந்த அணுகுமுறைதான் அவர்களின் முதல் ஆஷஸ் போட்டி தோல்விக்கும் காரணம் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து இப்போது இந்திய வீரர் அஸ்வின் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணி பாஸ்பால் திட்டத்தோடு களமிறங்கியதால் நாதன் லயனால் 8 விக்கெட்களை வீழ்த்த முடிந்தது என அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் “இங்கிலாந்து எப்போதும் போல மரபான டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி இருந்தால் லயனால் 4 அல்லது 5 விக்கெட்களைதான் வீழ்த்தி இருக்க முடியும். அந்த மைதானம் பொதுவாகவே சுழல்பந்துக்கு சாதகமாக உள்ளது. அதை பயன்படுத்தி அவர் கூடுதல் விக்கெட்களை வீழ்த்தினார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்