ஆஷஸ் தொடர்.. முதல் டெஸ்ட்டில் ஆஸிக்கு வெற்றி வாய்ப்பு –தப்பிக்குமா இங்கிலாந்து!

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (10:25 IST)
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் சில நாட்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. வழக்கம் போல தங்கள் பாஸ்பால் கிரிக்கெட்டை ஆடிய இங்கிலாந்து அணி விக்கெட்கள் விழுவதைப் பற்றி கவலைப்படாமல் அடித்து ஆடியது. இதன் மூலம் முதல் நாளில் 8 விக்கெட் இழப்புக்கு 393 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் அறிவித்தார் பென் ஸ்டோக்ஸ்.

அதன் பின்னர் ஆடிய ஆஸி. அணி நிதானமாக விளையாடியது. அந்த அணியின் உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடி சதமடித்து அணியை நல்ல ஸ்கோர் நோக்கி வழிநடத்தினார். நேற்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆஸி அணி 386 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸையும் அதிரடியாக ஆடிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் 273 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  இதன் மூலம் ஆஸி அணியின் வெற்றிக்கு இலக்காக 281 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸி அணி நான்காம் நாள் ஆட்டமுடிவில் 3 விக்கெட்களை இழந்து 107 ரன்கள் சேர்த்துள்ளது. ஐந்தாம் நாளில் வெற்றிக்கு 174 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆஸி அணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால் ஐந்தாம் நாளில் விக்கெட்களை உடனடியாக வீழ்த்தினால் இங்கிலாந்து அணிக்கும் வெற்றி பெற சிறிது வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்