ஐபிஎல்லில் நன்றாக விளையாடும் வீரர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் திடீரென மோசமான அளவில் அவுட் ஆவது குறித்து சமூக வலைதளங்களில் புதிய நம்பிக்கை ஒன்று பரவி வருகிறது.
நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட லீக் போட்டிகள் முடிவடைய உள்ள நிலையில் முதல் 4 இடங்களுக்குள் நுழைந்து ப்ளே ஆப் தகுதி பெற பல அணிகளும் முயன்று வருகின்றன. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் முக்கியமான ப்ளேயர்கள் எதிர்பாராதவிதமாக டக் அவுட் ஆகிவிடும் சம்பவங்களும் நடக்கின்றன. இதற்கு ஒரு பாடல்தான் காரணம் என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதுகுறித்து பார்ப்போம்.
ஐபிஎல்லில் விளையாடும் ஹேண்ட்ஸமான கிரிக்கெட் ப்ளேயர்களை இளம்பெண்கள் தங்கள் க்ரஷ் லிஸ்டில் சேர்த்துக் கொள்வது வழக்கம். அப்படி இந்த ஐபிஎல்லில் முதலில் க்ரஷ் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டவர் சிஎஸ்கேவுக்காக விளையாடிய ரச்சின் ரவீந்திரா. முதல் இரண்டு போட்டிகளில் ரச்சின் ரவீந்திரா சிறப்பாக விளையாடினார். அவரது சிறப்பான ஆட்டத்தால் கவரப்பட்ட ரசிகைகள் அவருக்கு மன்மதனே நீ கலைஞன் தான் பாட்டை எடிட் செய்து பரப்பினர். அதை தொடர்ந்து அவர் அடுத்தடுத்த போட்டிகளில் மோசமாக விளையாடியதுடன் தற்போது ப்ளேயிங் 11ல் இருந்தே எடுக்கப்பட்டு விட்டார்.
ஆனால் அதற்கு நடுவே க்ரஷ் லிஸ்ட்டில் மாட்டிக் கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு மன்மதனே எடிட் விளையாடிவிட்டது. இதுவரையிலான அனைத்து போட்டிகளிலும் நல்ல ஸ்கோரை கொடுத்து வந்த சஞ்சு நேற்றைய போட்டியில் டக் அவுட் ஆனார். இவர் மட்டுமல்ல சிஎஸ்கேவின் ஷிவம் துபேவும் ஆரம்பம் முதலே ஆறுச்சாமியாக சிக்ஸர் அடித்து வந்தவர் மன்மதனே எடிட்டில் சிக்கிய பின் சுமாராக விளையாடி வருகிறார். அழகாக விக்கெட் வீழ்த்தி வந்த மயங்க் யாதவ் இந்த பாடலால் காயம்பட்டார் என நம்பப்படுகிறது.