மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

vinoth

புதன், 1 மே 2024 (08:58 IST)
மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி மிகவும் லோ ஸ்கோர் போட்டியாக இருந்தாலும் கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 144 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அந்த அணியின் நெகல் வதேரா மற்றும் டிம் டேவிட் ஆகியோர் முறையே அதிகபட்சமாக 46 மற்றும் 35 ஆகிய ரன்களை சேர்த்தனர்.  மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து 145 ரன்கள் என்ற எளிய இலக்கோடு களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சீரான இடைவெளியில்  விக்கெட்களை இழந்தாலும் கடைசி ஓவரில் இலக்கை எட்டியது.

இந்த போட்டியின் 19 ஆவது ஓவரில் சர்ச்சைக்குரிய ஒரு சம்பவம் நடந்தது. லக்னோ அணி வீரர் ஆயுஷ் பதோனி முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க முனைந்து ஓடிய போது இஷான் கிஷானால் ரன் அவுட் செய்யப்பட்டார். மிகவும் நெருக்கமான இந்த ரன் அவுட்டை மூன்றாவது நடுவருக்கு அனுப்பினார் கள நடுவர்.

டி வி ரிப்ளையில் ஆயுஷ் பதோனியின் பேட் கிரீஸை தாண்டி உள்ளே இருந்தது. ஆனால் மூன்றாம் நடுவர் பேட் கிரீஸில் பதியாமல் காற்றில் இருப்பதாகக் கூறி அதை அவுட் என அறிவித்தார். இது ஆயுஷ் பதோனிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அதனால் அவர் பெவிலியனுக்கு செல்லாமல் கள நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். ஆனால் அவர்கள் அவரை வெளியேற சொல்லி அனுப்பி வைத்தனர். இதையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நடுவர்களை கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்