அபிஷேக் ஷர்மா மற்றும் அமோல் ப்ரீத் சிங் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, டிராவிஸ் ஹெட்டுடன் ஜோடி சேர்ந்த நிதீஷ் ரெட்டி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்தனர். டிராவிஸ் ஹெட் 58 ரன்களில் ஆட்டமிழக்க, நிதீஷ் ரெட்டி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் சேர்த்தார்.
கடைசி நேர அதிரடியில் இறங்கிய கிளாசன் 19 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்களும், சந்தீப் ஷர்மா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.