இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 200 வது டி-20 போட்டி? ஜெயிப்பது யார்?

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (19:43 IST)
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை விளையாடி முடித்துள்ளது. டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் வென்றுள்ளது.
இந்த நிலையில்,   இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகல் கொண்ட டி 20 தொடர் இன்று முதல்  (ஆகஸ்ட் 3 ஆம் தேதி) தொடங்க உள்ளது.

இன்றைய போட்டியில் இந்திய அணியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி களமிறங்கும் என சொல்லப்படுகிறது.

ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 200  வது போட்டியில் விளையாட உள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற 199 போட்டிகளில் இந்திய அணி 130ல் வெற்றியும் 63ல் தோல்வியும், 1 ல் டை ஆகியுள்ளது. 5 போட்டிகள் பலனளிக்கவில்லை…இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா ? என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இப்போட்டி பிரைன் லாரா மைதானத்தில் நடக்கவுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்