இத்தொடரில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 16 அணிகள் விளையாடவுள்ளன.
ஆனால், தீபக் சாஹர், பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், இந்திய அணிக்கு சவால் காத்திருக்கிறது.
இந்த நிலையில், முன்னாள் இந்திய அணி பயிற்சியாளராக 7 ஆண்டுகள் பணியாற்றிய ரவிசாஸ்திரி, இந்திய அணி டி-20 போட்டியில் நம்பர் 1 அணியாக இருந்தாலும், பந்து வீச்சில் சிறந்து விளங்கினாலும் பீல்டிங்கீல் மோசமாக உள்ளதாக க்ருத்து தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, உலகக் கோப்பை, ஆசிய கோப்பையில் தோல்வியடைந்த இந்தியா இதில், கோப்பை வெல்ல வேண்டுமென இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.