தகாத இடத்தில் கை வைத்த நடிகர்: ஷூட்டிங் ஸ்பாட்டில் படாதபாடுபட்ட நடிகை

Webdunia
திங்கள், 4 மார்ச் 2019 (12:36 IST)
பிரபல இந்தி நடிகை டீனா, ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் தம்மிடம் அத்துமீறியது பற்றி வேதனையுடன் பேசியுள்ளார்.
 
மீடூ மூலம் நடிகைகள் தாங்க சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே சொல்லி வருகின்றனர். சிறிய நடிகைகள் முதல் பெரிய நடிகைகள் வரை நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பார்கள் பலர் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.
 
இந்நிலையில் இந்தியில் பிரபல சீரியல் நடிகை டீனா தத்தா, ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர் மோஹித் மல்ஹோத்ரா தன்னிடம் அத்துமீறியதாகவும், இதனால் மனவேதனையடைந்து செட்டில் இருந்து ஓடி வந்ததாகவும் கூறினார்.
 
இதுகுறித்து நடிகர் மோஹித் மல்ஹோத்ரா பேசுகையில், டீனா சொல்வது போல எதுவும் நடக்கவில்லை எனவும் தானும் டீனாவும் நல்ல நண்பர்கள் எனவும் கூறியிருக்கிறார். இதில் யார் கூறுவது உண்மை என்றே தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்