அப்போது எனக்குத் தெரிந்தவர்கள் சிலர் படத்தயாரிப்பில் ஈடுபடுமாறு கூறினார்கள். சிலர் முன்னணி நடிகரான விஜய் அவர்களை சந்திக்க சொன்னார்கள். நான் விஜய்யை அணுகி இதைப் பெற்றி கூறிய போது, அவர் என்னை நடிப்பைத் தொடருமாறு கூறினார்.
மேலும், நீ சிறப்பாக நடனமாடுகிறாய். என்னைவிட நன்றாக சண்டைப் போடுகிறாய் என்று என்னை ஊக்கப்படுத்தினார்.அந்த வார்த்தைகள் என்னை அடுத்த கட்டத்திற்கு செல்லுமாறு ஊக்குவித்தது. அதற்காக அவருக்கு நான் நன்றியுடன் இருப்பேன் இவ்வாறு தெரிவித்தார்.