சினிமாவில் அறிமுகமாகும் பிக் பாஸ் பிரபலத்தின் தங்கை! அதுவும் யாரோட படத்துலன்னு பாருங்க!

Webdunia
திங்கள், 4 மார்ச் 2019 (12:07 IST)
கடந்த ஆண்டு கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்கள் மத்தியில் மக்களுக்கு மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை ஜனனி . 


 
தமிழ் சினிமாவின் அழகிய நடிகையான இவர் 2009 ஆம் ஆண்டு ‘திரு திரு துரு துரு’ என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவுலகில் அறிமுகமானார். பிறகு 2011 ஆம் ஆண்டு விசித்திர படைப்புகளுக்கு பெயர்போன இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன் ‘ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கொள்ளைகொண்டார். 
 
தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால்,  நடிகை ஜனனி ஐயருக்கு கிருத்திகா என்ற தங்கை இருக்கிறார்  அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது ஜன்னணியை விட அவரது தங்கை மிகவும் அழகாக இருக்கிறார் என்று பலராலும் பேசப்பட்டது. 


 
இந்த நிலையில் தற்போது கிருத்திகா சினிமாவில் அறிமுகமாக இருக்கிறாராம். அதுவும் தனது அக்கா நடிக்கும் படத்திலேயே அறிமுகமாகப்போகிறாராம். ஜனனி ஐயர் தற்போது தெகிடி நாயகன் அசோக் செல்வனுடன் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இப்படத்தை புதுமுக இயக்குனர் சந்தீப் என்பவர் இயக்க ஜனனி ஐயர் தங்கை கிருத்திகா இப்படத்தில்  ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஆகவே கூடிய விரைவில் இதைப்பற்றிய அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்