இலங்கை எரிபொருள் விலை உயர்வுக்கு வித்தியாசமாக எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்கட்சிகள் எம்.பி.க்கள்

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (12:47 IST)
இலங்கையில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திற்கு தங்களுடைய வாகனங்களில் வருகைத் தவிர்த்து, டிராக்டர்கள், டிரக்குகள், ஆட்டோ போன்ற வாகனங்களில் வந்து தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.

முன்னதாக, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, சபாநாயகரிடம்  கையளித்தது. எரிபொருள் விலை அதிகரிப்பை முன்னிலைப்படுத்தி, அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்