இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவக் காரணாக இருந்த டெல்டா திரிபு, இலங்கையில் முதல் முறை கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் உயிரியல் பிரிவின் பிரதானி சிறப்பு மருத்துவர் டாக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த வைரஸ் இலங்கை சமூகத்திற்குள் இருந்து இதுவரை கண்டறியப்படவில்லை. இப்போது முதல் தடவையாக சமூகத்திற்குள் இந்த திரிபு கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு - தெமட்டகொட பகுதியிலுள்ள ஐவரிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் டெல்டா திரிபு சமூகத்தில் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.