யுக்ரேன் தொலைக்காட்சி கோபுரம் மீதான ரஷ்ய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது - யுக்ரேனிய வெளியுறவுத்துறை

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (00:44 IST)
யுக்ரேன்: ஹோலோகாஸ்ட் நினைவிடம் அருகே தொலைக்காட்சி கோபுரத்தைத் தாக்கிய ரஷ்யாவின் செயல் 'காட்டுமிராண்டித்தனமானது' என்று யுக்ரேனிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
நாஜியின் ஹோலோகாஸ்ட் காலத்தில் யூதர்கள் பெருமளவில் திரளாக கொல்லப்பட்ட மிகப்பெரிய இடமாக இருப்பது பேபின்யார். இந்த நினைவை கூரும் இடத்துக்கு அருகே தொலைக்காட்சி கோபுரம் உள்ளது. அதைத்தான் ரஷ்ய படையினர் தாக்கியுள்ளனர்.
 
குழந்தைகளுக்கான தனி நினைவகம் உட்பட, இறந்தவர்களை நினைவுகூருவதற்காக இந்த தளத்தில் நினைவுச் சின்னங்கள் உள்ளன.
 
இந்த சம்பவத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள யுக்ரேனிய வெளியுறவு அமைச்சகம், "ரஷ்ய துருப்புக்கள் #BabynYar நினைவு வளாகத்திற்கு அருகிலுள்ள தொலைக்காட்சி கோபுரத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. ரஷ்ய குற்றவாளிகள் தங்கள் காட்டுமிராண்டித்தனத்தில் எதையும் நிறுத்துவதில்லை. ரஷ்யா = காட்டுமிராண்டித்தனம்," என்று கூறியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்