5000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர் - யுக்ரேன் அரசு

திங்கள், 28 பிப்ரவரி 2022 (17:44 IST)
யுக்ரேனில் கடந்த நான்கு நாட்களில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக கீயவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இது சம்பந்தமாக முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், சுமார் 5,300 ரஷ்ய படைவீரர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 191 டாங்கிகள், 29 போர் விமானங்கள், 29 ஹெலிகாப்டர்கள் மற்றும் 816 ராணுவ கவச வாகனங்கள் யுக்ரேனிய படைகளால் அழிக்கப்பட்டதாக யுக்ரேனிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், இந்தக்கூற்று பிபிசியால் உறுதி செய்யப்படவில்லை. அதேசமயம், படையெடுப்பின் ஆரம்ப கட்டங்களில் ரஷ்யா "கடுமையான" உயிரிழப்புகளை சந்தித்ததாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் நம்புகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, யுக்ரேனிய படையெடுப்பின்போது தங்கள் நாட்டு வீரர்கள் கொல்லப்பட்ட தகவலை ரஷ்ய பாதுகாப்புத்துறை கூறியது. ஆனால், எத்தனை பேர் இறந்தனர் என்ற கணக்கை அதன் அதிகாரிகள் வெளியிடவில்லை

முதல்நாள் நடந்த ரஷ்ய யுக்ரேனிய படையெடுப்பில், குறைந்தது 94 பொதுமக்கள் இறந்ததை உறுதிப்படுத்தியதாகவும், ரஷ்ய படையெடுப்பால் "கடுமையான மனிதாபிமான விளைவுகள்" தூண்டப்பட்டுள்ளதாகவும் உயிரிழப்புகள் கணிசமாக அதிகமாக இருக்கலாம் என்றும் ஐ.நா பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்