மதுபாலா: இவருக்கு ஏன் கூகுள் டூடுள் வெளியிட்டது? - 5 சுவாரஸ்ய தகவல்கள்

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (21:17 IST)
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை மதுபாலாவின் 86வது பிறந்தநாள் இன்று. அவர் திரைத்துறைக்கு ஆற்றிய பணியை சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டுள்ளது.
யார் இந்த மதுபாலா? ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்
 
1. மதுபாலாவின் இயற்பெயர் மும்தாஜ் ஜெஹான் பேகம் தெலாவி. 1933ல் டெல்லியில் பிறந்த அவர் பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தை.
 
2. தனது 9வது வயதில் திரைப்படத்துறையில் கால்பதித்த மதுபாலா 70ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
3. 1960ல் வெளியான மொஹல்-இ-அஸாம் என்ற திரைப்படத்தில் 'அனார்கலி' என்ற கதாபாத்திரத்தில் மதுபாலா நடித்திருந்தார். இன்னும் பல தசாப்தங்களுக்கு மதுபாலாவின் நடிப்பு திறமை குறித்து பேசும் படமாக இது இருக்கும்.
 
4. பிரபல இந்தி நடிகர் திலீப் குமாருடனான காதல் முறிவுக்குப் பிறகு பாடகர் கிஷோர் குமாரை மணந்த அவர் தனது 36வயதில் இதய கோளாறு காரணமாக காலமானார்.
 
5. பாலிவுட்டின் மர்லின் மன்றோ என்று கொண்டாட்டப்பட்ட மதுபாலா, அவரது வாழ்நாள் இறுதியில் அன்பு செலுத்த யாருமின்றி மரணித்தது காலத்தின் கொடுமை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்