நிர்மலாதேவியை படம்பிடித்த பத்திரிகையாளர்கள் மீது போலீஸ் தாக்குதல்

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (21:04 IST)
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிர்மலாதேவி இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை பேட்டியெடுக்க முயன்ற பத்திரிகையாளர்களை போலீசார் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
கடந்த முறை நிர்மலாதேவி நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டபோது, 'போலீசார் தன்னை மிரட்டி வாக்குமூலம் பெற்றதாக குற்றஞ்சாட்டினார். அதனால் இன்று அவரிடம் இருந்து ஏதாவது தகவல் கிடைக்கும் என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் முன் பத்திரிகையாளர்கள் குவிந்தனர். இதனால் நிர்மலாதேவியை பத்திரிகையாளர்கள் நெருங்கவிடாமல் போலீசார் அவரை பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். 
 
இருப்பினும் ஒருசில பத்திரிகையாளர்கள் நிர்மலாதேவியிடம் பேட்டியெடுக்க முயன்றபோது அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் இருதரப்பினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சில பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர்.
 
இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்கள் தாக்கபட்டதை கண்டித்தும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பத்திரிக்கையாளர்கள் சங்கம், அனைத்து கட்சிசார்பாக ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பாக இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்