கோவிட் 19 விளையாட்டை தடை செய்த சீனா - ஏன் தெரியுமா?

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (15:05 IST)
கொரோனா வைரஸை மையக்கருவாக கொண்ட விளையாட்டை தடை செய்துள்ளது சீன அரசு.
 
கொரோனாவால் தாக்கப்பட்ட ஜோம்பிகள் (Zombies) வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதை தடுப்பதுதான் விளையாட்டின் மைக்கரு. சீன கொடி வண்ணத்தில் சிவப்பாகவும், கொடியில் நட்சத்திரங்கள் உள்ள இடத்தில் கொரோனாவைரஸ் வடிவத்தை வைத்தும் இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
 
அதுபோல தைவான் சீனாவின் பகுதி அல்ல, ஹாங்காங்கை விடுதலை செய் போன்ற அரசியல் விஷயங்களும் இந்த விளையாட்டில் இடம் பெற்றிருக்கிறது. இதன் காரணமாகவே இந்த மொபைல் விளையாட்டு தடை செய்யப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்