இந்தியாவில் கொரொனாவால் பாதிப்பட்டோரின் எண்ணிக்கை 30,000 நெருங்கி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,543 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 29,435 ஆக உயர்ந்ததுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 23.3% ஆக அதிகரித்துள்ளது எனவும், இதுவரை 6,868 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள மருத்து ஆராய்ச்சி மையத்தின் தலைவர், தடுப்பூசி மனிதர்களிடம் செலுத்தப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டு வருவதாகவும், செப்டம்பர் மாதம் இறுதியில் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.