கொரோனாவைரஸ்பெருந்தொற்றால்உண்டாகியுள்ளபொருளாதாரஇழப்புகளைசரிசெய்ய 484 பில்லியன் (48,400 கோடி) அமெரிக்கடாலர்மதிப்புள்ளநிவாரணத்தொகுப்புக்குஅமெரிக்கநாடாளுமன்றமானகாங்கிரஸ், வியாழன்றுஒப்புதல்அளித்துள்ளது.
இது அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள, கோவிட்-19 உண்டாக்கிய பொருளாதார பாதிப்புகளுக்கு உதவிகள் வழங்கும் நான்காவது நிதி மசோதாவாகும்.
கடந்த மாதம் அமெரிக்க வரலாற்றிலேயே அதிகபட்சமாக இரண்டு டிரில்லியன் (இரண்டு லட்சம் கோடி) டாலர் மதிப்பிலான பொருளாதார உதவி நிதித் தொகுப்புக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்தது.
இதுவரை சுமார் 3 டிரில்லியன் டாலர் (3 லட்சம் கோடி) அளவுக்கு நிவாரண உதவிகளை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இது அமெரிக்க அரசின் நிதிப் பற்றாக்குறையை வரலாறு காணாத அளவுக்கு அதிகரிக்கச் செய்யும்.