"பசியுடன் ஒரு பார்வை" வைரலான சிறுமியின் புகைப்படம் - உண்மையில் நடந்தது என்ன?

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (21:47 IST)
ஐதராபாத்தில் ஐந்து வயது சிறுமி ஒருவர், கையில் தட்டுடன் பள்ளி வகுப்பறை ஒன்றின் வெளியே நின்று கொண்டு ஏக்கத்துடன் எட்டிப் பார்ப்பது போன்ற புகைப்படம் பெரும் கவனத்தை பெற்றது.
ஆனால் அந்த புகைப்படத்தின் பின்னணி வேறொன்றாக உள்ளது.
 
அதுகுறித்து அறிய பிபிசி தெலுங்கு சேவையின் செய்தியாளர் தீப்தி பதினி சிறுமியின் தந்தையிடம் பேசினார்.
 
திவ்யா என்ற அந்த சிறுமி வசிக்கும் பகுதியில் தற்போது அவள் புகழ்பெற்றுவிட்டாள்.
 
அந்த ஐந்து வயது சிறுமி இருக்கும் புகைப்படம் சமீபத்தில் வைரலானது. அந்த உருக்கமான புகைப்படம் நவம்பர் 7ஆம் தேதி தெலுங்கு செய்தித்தாள் ஒன்றில் "பசியுடன் ஒரு பார்வை" என்ற வாக்கியத்துடன் பிரசுரமானது.
 
அது உடனே மக்களின் கவனத்தையும் பெற்றது. குழந்தைகள் நல ஆர்வலர்கள் அந்த புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்துவிட்டு, உணவு மற்றும் கல்வி மறுக்கப்படும் மற்றொரு குழந்தை என குறிப்பிட்டிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்