கன்னடர் என கூறி அவரை ஒதுக்ககூடாது: சிறுத்தைகள் பாய்ச்சல்!!

Webdunia
ஞாயிறு, 21 மே 2017 (09:42 IST)
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்தார். அப்போது அரசியலுக்கு வருவது குறித்து நேர்மறையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். 


 
 
இந்நிலையில், நடிகர் ரஜினியை கன்னடர் என்று சொல்லி அரசியலுக்கு வருவதை தடுத்தால் அது இனவெறி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
 
மேலும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ரஜினியை கன்னடர் என்று குறிப்பிடுவது இனவெறி. நடிகர் ரஜினியை விமர்சனம் செய்ய பல்வேறு காரணங்கள் உள்ளதாகவும், கன்னடர் என்ற கூற்றை மட்டும் எடுத்துக் கொள்வது உகந்ததல்ல கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்