அடப்பாவிகளா! பாஜக கொடி இதுக்குத்தான் பயன்படுதா?

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (06:15 IST)
எப்படியாவது தமிழகத்தில் தங்கள் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று குட்டிகர்ணம் அடித்து வரும் பாஜகவினர் வீடு வீடாக சென்று போன் நம்பரை வாங்கி அதன் மூலம் கட்சி உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கட்சி கொடிகளை கொடுத்தும் வருகின்றனர்.



 
 
இந்த நிலையில் பாஜகவினர் கொடுக்கும் கட்சி கொடிகளை பொதுமக்கள் எதற்கு பயன்படுத்துகின்றனர் என்பது குறித்த தகவல்கள் ஆச்சரியத்தையும் சிரிப்பையும் வரவழைத்துள்ளது. பெரும்பாலும் பெண்கள் தங்கள் அடுப்பங்கரையில் கரித்துணியாக இந்த கொடியை பயன்படுத்தி வரும் நிலையில் சற்று முன் டுவிட்டரில் ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது
 
அதில் ஒரு பாவாடை கொடியில் காயப்போடப்பட்டுள்ளது. அந்த பாவாடையின் நாடா, பாஜக கொடியினால் உள்ளது. இதை பார்த்த டுவிட்டர் பயனாளிகள் சிரித்து சிரித்து வயிற்றை புண்ணாக்கி கொண்டனர். அவர்கள் பதிவு செய்திருக்கும் கமெண்ட்டுக்களும் சிரிப்பை வரவழைக்கின்றது. இதை பார்த்தால் பாஜகவினர் மனம் கஷ்டப்படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்