அமித்ஷா தமிழக வருகை ரத்து: உண்மையான காரணம் என்ன?

புதன், 23 ஆகஸ்ட் 2017 (06:47 IST)
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகஸ்ட் 22 முதல் 24 வரை தமிழக வருவதாக இருந்தது. சென்னை மற்றும் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருந்த அவரது வருகை திடீரென 21ஆம் தேதி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.



 
 
பாஜக மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவே தமிழக வருகை ரத்து என்று காரணம் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் வேறு என்று பாஜக தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
 
ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்பு சுதந்திர தினத்திற்கு முன் நடக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் கட்டளை. ஆனால் ஓபிஎஸ் பிடிவாதம் ஈபிஎஸ் தரப்பு தயக்கம் காரணமாக ஆகஸ்ட் 21ஆம் தேதிதான் இணைப்பு நடந்தது.
 
ஏற்கனவே அதிமுகவை பாஜக கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில் இணைப்பு நிகழ்ந்த மறுநாள் அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தந்தால்  அந்த விமர்சனத்தை உறுதிப்படுத்துவதாக அமையும் என்று மூத்த தலைவர்கள் கருதியதால் தமிழக  பயணம் தள்ளிப்போனதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்