ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக்-சசிகலா திடீர் சந்திப்பு.

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2017 (22:31 IST)
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருந்து வரும் நிலையில் இன்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், அவரை சிறையில் சந்தித்து பேசியுள்ளார்.



பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த தீபக், சசிகலா சிறையில் நலமுடன் உள்ளார் என்றும், அவருக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பேன் என்றும் கூறினார்

மேலும் தீபா குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்த அவர், தீபாவின் அரசியல் நடவடிக்கை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றார்.

சசிகலா விரைவில் வெளியே வருவார் என்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு என்பதால் அதுகுறித்து நான் எதுவும் தற்போது வெளியே சொல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
அடுத்த கட்டுரையில்