பிப்ரவரி 7 முதல் 15 ஆம் தேதி வரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பரப்புரையாற்ற உள்ளார் என அறிவிப்பு.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது என்பதும் நேற்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வேட்புமனுக்கள் அனைத்தும் இன்று பரிசீலனை செய்யப்பட்டு முறைப்படி இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும். 7 ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை திரும்பப் பெற அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் களத்தில் இருக்கும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
இந்நிலையில் கொரோனா பரவலும் அதிகரித்து இருக்கும் நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் மேற்கொள்ள உள்ளார். பிப்.6-ம் தேதி முதல் காணொலியில் பரப்புரை மேற்கொள்கிறார்.
இதே போல நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக பிப்ரவரி 7 முதல் 15 ஆம் தேதி வரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பரப்புரையாற்ற உள்ளார். காஞ்சிபுரம், வேலூர், ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கரூர்,கடலூர், சென்னை, தாம்பரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகரில் ஓபிஎஸ் பரப்புரை செய்கிறார்.