உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் கடந்த சில நாட்களுக்கு முன் உயர்ந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி 1,07,93,417 பேர்களுக்கு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 59,30,148ஆக உயர்ந்துள்ளதாகவும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,18,046ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் உலக பாதிப்பு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 4ல் ஒரு பங்கு உள்ளது. அதாவது அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 27,78,500ஆக உயர்வு என்றும் அந்நாட்டில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,30,789ஆக உயர்வு என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 605,220 என்பதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,848 என்பதும் குறிப்பிடத்தக்கது
பிரேசிலில் 1,453,369 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவில் 654,405 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் 313,483 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்பெயினில் 296,739 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெரு நாட்டில் 288,477 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிலி நாட்டில் 282,043 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.