கொதிக்கும் எண்ணெய்யில் கையைவிட்டு வடை சுடும் பாட்டி – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (09:54 IST)
இந்தோனேசியாவில் பாட்டி ஒருவர் கொதிக்கும் எண்ணெய்யில் கைவிட்டு வடை சுடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

நிலாவில் பாட்டி ஒருவர் வடை சுடுகிறார் என்று முன்னோர்கள் குழந்தைகளுக்கு கதை சொல்லி கதை சொல்லி பாட்டி என்றவுடன் நமக்கு வரை ஞாபகம் வரும் விதமாக பழக்கி வைத்துள்ளனர். அதுபோல இந்தோனேசியாவிலும் ஒரு பாட்டி வடை சுட்டு வைரலாகியுள்ளனர். அவரின் பிரபலத்துக்குக் காரணம் அவர் கொதிக்கும் எண்ணெய்யில் கைவிட்டு வடையை எடுத்து தருவதே ஆகும்.

இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாக, அந்த வீடியோவில் பாட்டி வடைகளை கையால் எடுத்து எண்ணெய் சட்டியில் போட்டுவிட்டு மீண்டும் அவை வெந்தவுடன் கைகளாலேயே எடுத்து அனைவருக்கும் சாப்பிட தருகிறார். இதைப் பார்க்கும் பலரும் எப்படி இது சாத்தியம் எனக் குழம்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்