சூட்கேஸில் சடலமாக கிடைத்த பெண் ! அதிர்ச்சியூட்டும் கொலை பின்னணி

Webdunia
புதன், 6 மார்ச் 2019 (13:57 IST)
இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட  இளம் பெண் மருத்துவர் (32) ஆஸ்திரேலியாவில் சூட்கேஸில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பிரீத்தி ரெட்டி என்பவர் ஆஸ்திரேலியாவில் பல் மருத்துவராக பணியாற்றி வந்தார்.  இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை சிட்னியில் உள்ள பிரபல மருத்துவ மாநாட்டிற்கு சென்றுவிட்டு தன் வீட்டிற்கு இரவில் திரும்பவில்லை என்று தெரிகிறது.
 
பிரீத்தி ரெட்டி வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதனடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். 
 
இதனையடுத்து  போலீஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பிரீத்தி ரெட்டி தன் காதலருடன் மாநாட்டிற்கு சென்றதாகவும் அதன் பின்னர் இருவரும் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியதாகவும் தெரிகிறது.
 
பிரீத்தி காணாமல் போவதற்கு முன்னதாக அவர் ஒரு பிரபல  ரெஸ்டாரெண்டில் காலை உணவுக்காக பில் கட்டுவது போன்று  சிசிடிவி கேமராவில் ஒரு காட்சி பதிவாகியிருந்தது.
 
இதனையடுத்து போலீஸார் தங்கள் விசாரணையை  முடித்த சில நிமிடங்களிலேயே சிட்னி சாலையில் ப்ரீத்தியின் முன்னாள் காதலர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
அப்போது பீர்த்தி ரெட்டியின் கார் ஒரு பகுதியில் நிற்பதாகத் தெரிந்தது.அதனைத் திறந்து பார்த்த போது காரில் உள்ள சூட்கேஸில் ப்ரீத்தி ரெட்டி சடலமாகக் கிடந்துள்ளார். 
 
இதனையடுத்து போலீஸார் பிரீத்தி ரெட்டியின் சடலத்தை உடற்கூறு சோதனைக்காக அனுப்பி வைத்ததாகவும் மீண்டும் இந்தக் கொலைகான காரணத்தைப் பற்றி அவர்கள் விசாரித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்