உறை பனியில் நடக்கும் நாய் சவாரி பந்தயம்: 150 நாய்கள் இறந்ததாக கூறும் பீட்டா

திங்கள், 4 மார்ச் 2019 (20:49 IST)
அலாஸ்காவில் நடைபெறும் 47ஆவது நாய் சவாரி பந்தயத்தைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
பனி படர்ந்த சாலையில் நடக்குமிந்த பந்தயத்தில் நாய்கள் கூட்டாக கட்டப்பட்டிருக்கும். அதனை ஒருவர் இயக்குவார்.
 
இந்த பந்தயம் நடக்கும் பாதையின் மொத்த நீளம் 1600 கிலோ மீட்டர்.
 
இந்த பயண பாதையில் இரண்டு மலைகளும், உறைந்து போன ஒரு நதியும் உள்ளது.
 
இந்த போட்டியில் கலந்து கொள்ளும் நாய்களுக்கு போதை மருந்துகள் அளிக்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்ததை அடுத்து பல விளம்பரதாரர்கள் இந்த போட்டியிலிருந்து விலகினர்.
'தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை; தொடர்ச்சியில் இருக்கிறது'
 
பழங்குடி பெண் திரைப்பட இயக்குநரான கதை - நம்பிக்கை பகிர்வு
 
பீட்டா
 
இந்த போட்டியில் இதுவரை 150 நாய்கள் இறந்து போனதாக பீட்டா அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது. கடந்த ஆண்டு ஒரு நாயும், 2017இல் ஐந்து நாய்கள் இறந்து போனதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.
 
கடந்த ஆண்டு நார்வேவின் உல்சோம் 9 நாட்கள் மற்றும் 12 மணி நேரம் பயணித்து இலக்கை அடைந்து பரிசு தொகையான 50,000 டாலர்களை வென்றார்.
 
இந்த நாய்களை பராமரிக்கும், பயிற்சி அளிக்கும் சீவே குடும்பத்தினர்தான் வழக்கமாக இந்த போட்டியில் வெல்வார்கள்.
 
கடந்த ஏழு ஆண்டுகளில் அந்த குடும்பத்தை சாராத ஒருவர் பரிசை வென்றுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்