பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

Senthil Velan
சனி, 28 செப்டம்பர் 2024 (15:59 IST)
விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்பதற்காக க்ரூ-9 செல்லும் விண்கலம் இன்று இரவு 10.47 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.
 
போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் ஐந்தாம் தேதி சர்வதேச விண்வெளி மையம் சென்றனர். அங்கிருந்து ஆய்வு நடத்திவிட்டு பூமிக்கு திரும்பும் நிலையில் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
 
ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்துவிசை கருவியில் ஏற்பட்ட கோளாறால் இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 8 நாள் பயணம் 8 மாதமாக நீட்டிக்கப்பட்டது. 
 
தற்போது 110 நாட்களுக்கு மேலாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்வெளி மையத்தில் தவித்து வருகின்றனர். அவர்களை அழைத்து வர நாசா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாடியது. 
 
அந்நிறுவனத்தின் டிராகன் கேப்சூல் எனப்படும் விண்கலன் உதவியுடன் அவர்களை அழைத்து வர உள்ளனர். 4 வீரர்கள் குழுவுடன் விண்வெளிக்கு செல்லும் இந்த டிராகன் விண்கலன் அடுத்தாண்டு பிப்ரவரியில் தான் பூமிக்கு திரும்பும் என தகவல் வெளியானது. 


ALSO READ: தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

இந்த நிலையில், நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்பதற்கான க்ரூ-9 செல்லும் விண்கலம் இன்று இரவு 10.47 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்