இந்தியாவின் நிலையை பார்க்க வேதனையாக உள்ளது! – உலக சுகாதார அமைப்பு வேதனை!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (08:35 IST)
உலகிலேயே அதிகமான தினசரி பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகி வரும் நிலையில் இந்தியாவின் நிலைமை கவலை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளன. இதனால் உலக அளவில் அதிகமான தினசரி பாதிப்புகளை சந்திக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் மக்கள் பலர் உயிரிழந்து வரும் நிலையில் உலக நாடுகள் பல இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதானம் ”இந்தியாவில் நிலவும் சூழல் மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. முக்கிய கருவிகள் உள்பட உலக சுகாதார அமைப்பால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்வோம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்